அணு குண்டை உருவாக்கும் திட்டத்தை அவர் வெற்றிகரமாக முடித்து தமிழகம் வந்தபோது சொன்ன உதாரணம் அவரை திரும்பிப் பார்க்க வைத்தது..
” வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.. ”
என்ற வள்ளுவனின் குறளைச் சொல்லி இந்தக் குறளுக்குள் இருக்கும் உயர்ந்த விஞ்ஞானச் சிந்தனைக்கு அப்பால் உலகில் என்ன இருக்கப்போகிறது என்று கேட்டார்.
” தண்ணீரின் அளவுக்குத் தகுந்தபடி தாமரை மலர்களின் தாள்கள் நீளும். அதைப்போல மனிதர்களுடைய ஊக்கத்தின் அளவுக்குத் தக்கபடி அவர்களுடைய சிறப்புகள் உயரும்.”
” நீர் உயர உயர குளத்தில் இருக்கும் மலரின் தண்டும் அதற்கு அமைவாக உயர்வடையும்.. நீங்கள் கனவு காணலாம், கற்பனைகளை வளர்க்கலாம் அதற்கமைவாக உங்கள் உடல் தயாராகும்.. இதைவிட ஒரு உதாரணம் வேறெந்த மொழியிலும் கிடையாது..” என்றார்…
தமிழை மதிக்காத.. தமிழர்களை ஒரு கணம் தமிழைப் பார்க்க வைத்தார்.