23, December 2024

புலிக்குட்டி கதை – Tamil Story

இந்த தமிழினம் எல்லாவற்றையும் அறிந்த ஓரினம்..அடிக்கடி என் ஆசான் தமிழ்த்திரு திருமாவளவன் கூறுகின்ற குட்டிக் கதை இது,பொறுமையோடு இதனைப் படியுங்கள்….புலிக்குட்டி ஒன்று ஆட்டு மந்தையின் நடுவில் சிக்கிக் கொண்டது,எங்குமே போக வழி தெரியாமல், பின் அது அக்கூட்டதிலேயே இருந்து விட்டது.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அங்கே அது ஆடாய் வளர்ந்தது ஆட்டு மொழியையும் திறமையாய் கற்றது..,பின்னொருநாள் ஆட்டு மந்தைகளுடன் இறை தேடி கொண்டிருந்தபோது, வேறொரு பகுதியில் வந்த ஒரு புலி ஆட்டுக் கூட்டத்தினை வேட்டையாட பாய்ந்தது..பயம் கொண்ட அத்தனை ஆடுகளும் பயந்து ஓடிவிட்டன…ஆடுபோல் தன்னை எண்ணிக் கொண்டு வளர்ந்த புலியாடு மாட்டிக் கொண்டது..மாட்டிக் கொண்ட அந்த ஆட்டை உற்று நோக்கிய புலி,வியந்து போய் அந்த புலியாட்டை பார்த்து..அடே புலியே நீ உறும வேண்டும்… ஏன் நீ ஆடு போல கத்துகிறாய்? நீ புலி…உன்கூரிய நகங்களைப் பார்,உனது பற்களைப் பார்,உன் முகத்தை நீ உற்றுப் பார் என்று ஒரு குளத்தினருகே அழைத்து அதன் உருவத்தைக் காட்டி தான் யாரென்று உணர்த்தியது.
இக்கதையைப் போலத்தான் நம்மினம்,தன்னை யாரென்று அறியாமல் எல்லாவற்றையும் இழந்து,இனி இழக்க எதுவும் இல்லாத இனமாய் நாதியற்றவனாக வாழ்கிறான்..நான் பல நிகழ்வுகளில் கலந்து கொள்பவன்,தமிழ் நெறி கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டப் பிறகு,நான் அறிந்த பல உண்மைகள் என்னை சிறிதளவு நெறிப் படுத்தியது..தங்களைப் போலவே கண்ணெதிரே நடக்கின்ற மொழி அழிப்பினைக் கண்டு நொந்து போவேன்..சிலரிடமல்ல..பலரிடம் எடுத்துக் கூரியுமுள்ளேன்..என்ன சொல்வார்கள் தெரியுமா? ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான்,நீங்கள் சொல்வதுபோல் நான் செய்தால் எனது வணிகம் பாதிக்குமே..என் செய்வேன் என்கிறான். மலாய் மொழியில் ஒரு பதாகை செய்கிறோம் என வைத்துக் கொள்வோம்…அதில் ஒரு எழுத்து கூட பிழை இல்லாமல் அச்சிடுவோம்..அதே பதாகையை தமிழில் அச்சி செய்யும்போது எத்தனையோ பிழைகள் இருக்கும் அதனை சரி செய்ய கொஞ்சம் கூட முனைப்பு காட்ட மாட்டார்கள்..எனக்கென்ன என்ற எண்ணம் அங்கே மேலோங்கி நிற்கும் வரையில் தன்னை ஒரு தமிழனாக கூட காட்டிக் கொள்ள வெட்கப் படுகிறார்கள் ..அம்மாவை மம்மி என்றும் அப்பாவை டேடி என்றும் அழைக்க ஆசைப் படும் இக் கூட்டம் ஆட்டு மந்தையில் மாட்டிக்கொண்ட புலியை விட மந்தமானவனாக இருக்கிறானே..
பிறந்த நாள் வாழ்த்து பாடலை ஆங்கிலத்தில் பாடினால் தான் பெருமையாக கருதுவார்கள் ,அணிச்சலை கேக் என்று சொன்னால்தான் மகிழ்ச்சி அடைவார்கள் , ஏன் காதலைக்கூட, ஐ லௌ யூ என்ற வார்த்தையில் ஆங்கிலத்தில் கூறித்தான் , தன் காதலையே வெளிப் படுத்துவார்கள்..யார் யாரையும் குற்றம் கூறி எந்த பலனும் இல்லை,அறியாத, தன்னிலை உணராத மனிதர்களை திருத்த முடியாது என்றில்லை…உலகத்தை திருத்த முயலாதே,உன்னை முதலில் திருத்து ,பின் உனது குடும்பம்,ஊர்,நாடு,உலகம்….இது சாத்தியமானால் நூறு இருநூறு ஆண்டுகளின் தமிழன் தமிழனாக மாறுவான்…இது உறுதி்..

– க.கதிரவன்

*Post courtasy of Sakthiyaseevm from SRJKTBM

Leave a Reply